100% நாங்களும் வசூல் வேட்டை ஆடி இருப்போம்.. தனுஷ், சிவகார்த்திகேயனை பீட் செய்த மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான மாநாடு படம் அடாத மழையிலும் விடாமல் வசூல் செய்து வருகிறது. எங்கு திரும்பினாலும் மாநாடு படத்தின் பேச்சு தான். சிம்பு திரை வரலாற்றில் இப்படி ஒரு படமா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகிறார்கள்.

படம் வெளியான நாள் முதல் தற்போது வரை படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியம் மாநாடு படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

படம் வெளியான முதல் நாள் மட்டும் சுமார் 8.24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். அதிலும் மழை மற்றும் அதிகாலை காட்சி ரத்தாகமல் இருந்திருந்தால் முதல் நாளில் 10 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் டாக்டர் மற்றும் கர்ணன் படங்களை விட அதிகமாம்.

டாக்டர் மற்றும் கர்ணன் போன்ற படங்களின் முதல் நாள் வசூலை மாநாடு படம் பீட் செய்துள்ளது. அதுமட்டுமல்ல தற்போது வரை மாநாடு படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துவிட்டதாம். படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 கோடிக்குள்தான் இருக்கும் என்பதால் போட்ட முதலீட்டைத் தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். இனி வசூலாகும் தொகை படத்தின் லாப கணக்கில்தான் சேருமாம்.

என்னதான் மாநாடு படம் டாக்டர் மற்றும் கர்ணன் படங்களை ஓவர்டேக் செய்திருந்தாலும் அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. ஆமாங்க டாக்டர் மற்றும் கர்ணன் படம் வெளியான சமயத்தில் தமிழகத்தில் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை 100% கொடுத்திருந்தால் இந்த படங்கள் இன்னும் அதிக வசூல் பெற்றிருக்கும்.

ஆனால் தற்போது மாநாடு படத்திற்கு அதுபோன்ற எந்தவித பிரச்சனையும் இல்லை. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் வேண்டுமானால் படத்தில் வசூலில் சற்று தொய்வு ஏற்படலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்