சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை கெஞ்ச காதலரோ கண்டுகொள்ளவில்லையாம்.

இசைக் குடும்பத்து நடிகரும், நடிகை ஒருவரும் பல காலமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்து லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

அவர்களின் அன்பை சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகர் முதலில் தனது காதலியை வற்புறுத்தி வந்துள்ளார்.

 

நடிகையோ பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார். தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உடனே திருமணம் செய்து கொள்வோம் என்று நடிகை நடிகரை கெஞ்சுகிறாராம்.

 

நடிகரோ திருமணம் பற்றி கண்டுகொள்ளத் தயாராக இல்லையாம்.