Pradeep-Poornima: நேற்றிலிருந்து பிக்பாஸ் பூர்ணிமாவின் முகம் களை இழந்து போய் இருக்கிறது. எப்போதும் இந்த கேங் செய்யும் தப்பை கண்டும் காணாமல் போகும் கமல் நேற்று பூர்ணிமாவை நன்றாக ரோஸ்ட் செய்து விட்டார். அதிலேயே தலை தொங்கி போய் அமர்ந்திருந்த பூர்ணிமாவுக்கு விஜய் வர்மா, அனன்யாவின் வரவு அடுத்த சம்பவமாக அமைந்தது.
வெளியில் அவருக்கு இருக்கும் கெட்ட பெயரை இருவரும் மாறி மாறி சொல்லியதே அவருக்கான பெரும் பூகம்பமாக அமைந்தது. அதை தொடர்ந்து இன்று வெளியான அத்தனை ப்ரோமோவிலும் அவர் அழுது வடிந்து கொண்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அவர் மாயாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதில் விஜய் வர்மா, அனன்யா என்னைப் பற்றி பேசியது செம காண்டாகுது. நாமினேஷன் செய்யும்போது கூட இப்படித்தான் பேசுறாங்க. ஆனால் தினேஷுக்கு மட்டும் சப்போர்ட் கிடைக்கிது என அனத்தி கொண்டிருந்தார்.
Also read: ரெட் கார்டு சர்ச்சையால் குத்துப்பட்ட வனிதா.. பிரதீப் ஷேர் செய்த வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட் பின்னணி
இதற்கு வழக்கம் போல் மாயா உன்னால முடியும், நீ யாருன்னு காட்டு என வேதம் ஓதிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் சமாதானம் ஆகாத பூர்ணிமா நீலி கண்ணீர் வடிக்கும் இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த பிக்பாஸ் ஆடியன்ஸ் பிரதீப்புக்கு செஞ்ச பாவத்துக்கு இதெல்லாம் தேவைதான்.
அந்த கர்மா தான் இப்ப திருப்பி அடிக்குது. தேவையில்லாம ஒருத்தருக்கு கொடுத்த கெட்ட பெயர் இப்ப திருப்பி வந்தா ஏத்துக்க தான் வேணும் என பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதைத்தான் தவளை தன் வாயால் கெடும் என்பார்கள்.
பிரதீப்பை வெளியில் அனுப்பும் போது கைதட்டி கொண்டாடிய பூர்ணிமா தனக்கு என்று வரும்போது அழுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் உப்பை தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். வெளியில் கெட்ட பெயர் இருக்கு என கேள்விப்பட்டதற்கே இப்படி கண்ணீர் விடும் பூர்ணிமா சோசியல் மீடியாவை பார்த்தால் என்ன செய்வாரோ தெரியவில்லை.
Also read: உல்லாசமா இருக்க பசங்கள ஏமாத்தி காச ஆட்டைய போடுவா.. பூர்ணிமாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய தோழி