இப்பொழுது சினிமாவில் உள்ள நடிகர்கள் ஆக்ஷன், காதல் காட்சி நடித்தோம் என்று இல்லாமல், அவரவர் தனக்கென்ன ஒரு ஸ்டைலை அமைக்க நிறைய புது புது விஷயங்களை செய்து வருகிறார். அதில் சில நடிகர்கள் பெண் வேடம் இட்டு அருமையாக நடித்து அசத்தியுள்ளார்.

Unni Mukundan

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நிறைய படத்தில் நடித்துள்ளார்கள் ஆனால் மலையாள திரையுலகில் பெரிய நடிகர்கள் யாரும் பெண் வேடமிட்டு நடித்தது இல்லை.

Unni Mukundan

மலையாள நடிகர் பிரிதிவ் ராஜ், ஜெய் ராம் போன்ற நடிகர்கள் மட்டுமே பெண் வேடத்தில் நடித்துள்ளார்கள் அந்த வகையில் தமிழில் 2011 ல் வெளியான சீடன் படத்தில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கும் படத்தில் பெண் வேடமிட்டு நடிக்கயுள்ளார்.

இவர் சீடன் படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படத்தில் நடித்துள்ளார்.தற்பொழுது அவர் நடிக்கும் சாணக்கிய தந்திரம் என்ற படத்தில் பெண் வேடமிட்டு கரிஷ்மா என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மலையாள திரை உலகில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.