Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த வாரிசு நடிகர் சீனியர் நடிகரின் மகளை காதலிக்கிறார்: கிசுகிசு பரப்பிய பிரபல நடிகை
மும்பை: தனது மூத்தகுடியாள் மகளும், வாரிசு நடிகரான ஹர்ஷ்வர்தன் கபூரும் காதலிப்பதாக கிளப்பி விட்டதே பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தானாம்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் முதல் மனைவி அம்ரிதா ராவ் மூலம் பிறந்தவர் சாரா அலி கான். குண்டாக இருந்த சாரா அலி கானை சயிப் அலி கானின் தற்போதைய மனைவியான நடிகை கரீனா கபூர் கான் ஒல்லியாக்கிவிட்டார்.
சாராவுக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.
சாரா அலி கானும், நடிகர் அனில் கபூரின் மகனுமான ஹர்ஷ்வர்தன் கபூரும் காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக பேசப்படுகிறது. இந்த பேச்சு எங்கிருந்து கிளம்பியது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.
சாரா
அண்மையில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் சாராவும், ஹர்ஷ்வர்தனும் அங்கு செல்லவில்லை.
ஹோட்டல்
பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் இசை நிகழ்ச்சியில் இருக்க சாராவும், ஹர்ஷ்வர்தனும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது.
கரீனா
சாராவும், ஹர்ஷ்வர்தனும் காதலிப்பதாக கிளப்பி விட்டதே சாராவின் சித்தியும், நடிகையுமான கரீனா கபூர் கான் தானாம். கரீனாவுக்கு கிசுகிசு என்றால் மிகவும் பிடிக்குமாம். பாலிவுட்டில் என்னென்ன நடக்கிறது என்ற தகவல் அனைத்தும் கரீனாவுக்கு தெரியுமாம். அந்த தகவலை அவர் பெரிய மனதுடன் பிறருக்கு தெரிவிக்கிறாராம்
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
