இவ்வளவு நாளா எங்கு இருந்தீர்கள்.. 83 ஆல் கோடிகளில் புரளும் கபில்தேவ் அண்ட் கோ

Kapil1-Cinemapettai.jpg
Kapil1-Cinemapettai.jpg

இந்தியாவில் இன்று கிரிக்கெட் என்பது பெருமைக்குரிய விளையாட்டாக உள்ளது. இப்போது கிரிக்கெட் வீரர்கள் பல கோடிகள் சம்பாதிக்கிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் 1983இல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது தான்.

அந்த காலகட்டத்தில் உலக அளவில் கிரிக்கெட் பரவலாக பார்க்கப்பட்டாலும் இந்தியா அணி பிரபலம் இல்லாத அணியாக இருந்தது . உலகத்தில் உள்ள மைதானங்களில் சிறந்த மைதானமாக பார்க்கப்படும் லாட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் அதை 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று இந்திய அணி அதை தவிடு பொடி ஆகியது.

அப்போது இந்திய அணியில் சுனில் கவஸ்கர் போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அப்போது இந்திய அணியின் கேப்டனாக வந்த கபில் தேவ் கொஞ்சம் கொஞ்சமாக அணியை செதுக்கி உலக கோப்பையை வென்றுள்ளார்.

Kapil-Cinemapettai
Kapil-Cinemapettai

இக்கதையை அடிப்படையாகக் கொண்டு தற்போது 83 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கபீல் தேவாக, ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவின் உடல் மொழியை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார் ரன்வீர் சிங். இவருக்கு அடுத்தபடியாக நடிகர் ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆக நடித்துள்ளார்.

83 படம் உண்மை கதை என்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமை தொகையை படக்குழு ஏற்கனவே அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவுக்கு 5 கோடி படக்குழு கொடுத்துள்ளது. 83 படக்குழு ஒட்டுமொத்தமாக அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் 15 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபில்தேவ் விளையாடிய காலத்தில் இந்திய அணிக்கு வெறும் ஆயிரக்கணக்கில் தான் சம்பளம். ஆனால் இப்பொழுது விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம். தற்போது 83 படக்குழுவினரால் கபில்தேவ்விற்கு மட்டுமின்றி அவரோடு விளையாடிய வீரர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளனர்.

Advertisement Amazon Prime Banner