fbpx
Connect with us

Cinemapettai

‘கண்ணே கலைமானே’ திரை விமர்சனம்.!

kanne kalaimane

Reviews | விமர்சனங்கள்

‘கண்ணே கலைமானே’ திரை விமர்சனம்.!

Kanne Kalaimaane | கண்ணே கலைமானே திரை விமர்சனம்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் இவர் பிரபல அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் இவர் ஹிட் படம் கொடுப்பதற்காக முயற்சி செய்து வருகிறார், இயக்குனர் சீனு ராமசாமியுடன்  இணைந்து தற்போது கண்ணே கலைமானே(“Kanne Kalaimaane”) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் கண்ணே கலைமானே திரைப்படம் இவருக்கு கை கொடுத்ததா என்பதை  தற்போது பார்க்கலாம்.

படத்தின் கதை.

உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு பக்கத்தில் உள்ள சோழவந்தானில் இருப்பவர் இவரின் பெயர் கமல கண்ணன் இவர்  இயற்கை விவசாயம் இலட்சியம் கொண்டவர் அதனால் இயற்கை விவசாய உரம் தயாரித்து வருகிறார், விவசாயம் மீது அதிக அக்கறை கொண்டவர்.

அந்த ஊருக்கு வங்கி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் தமன்னா, விவசாய கடன்கள் அதிகமாக கட்டாமல் இருக்கிறார்கள் அந்த ஊரில், அதில் முதல் ஆளாக இருப்பது உதயநிதி ஸ்டாலின் தான்.

அதனால் நடிகை தமன்னா வங்கி அதிகாரியாக உதயநிதி ஸ்டாலினை சந்திக்கிறார் அங்குதான் ஏற்படுகிறது மோதல் வழக்கம் போல் தான் மோதலில் ஆரம்பித்து பிறகு அது காதலில் தான் முடிகிறது, ஆம் உதயநிதி மற்றவர்களுக்காக லோன் வாங்கி கொடுத்து இவர் கஷ்டப்படுவதை அறிந்து தமன்னா உதயநிதியிடம் காதலில் விழுகிறார்.

kanne kalaimane

kanne kalaimane

உதயநிதிக்கு ஒரு பாட்டி  இருக்கிறார் அவர் தான் வடிவுக்கரசி, இவர் உதயநிதி காதலி தமன்ன குடும்ப  நிலைமையை பார்த்து திருமணத்திற்கு மறுக்கிறார், அதன்பிறகு உதயநிதி தன்னை வருத்திக்கொண்டு பட்டினி கிடந்து தனது பாட்டி   மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார்.

ஆனால் திருமணம் நடந்து அடுத்த நாளே தமன்னா வேலைக்கு செல்கிறார் அதை பார்த்து உதயநிதி பாட்டி  திட்டுகிறார், அதனால் உதயநிதி அப்பா இருவரையும் தனிக்குடித்தனம் வைக்கிறார் தனியாக வாழும் உதயநிதி மற்றும் தமன்னா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்கிறது அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

படத்தில் நெகட்டிவ்

மொத்த படமும் உதயநிதி மற்றும் தமன்னாவை சுற்றி தான் கதை நகர்கிறது கடைசிவரை இயக்குனர் சீனுராமசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதே தெரியவில்லை.

அதேபோல் படத்தின் இடைவேளை வரை கதையே இல்லாமல் நகர்ந்து செல்கிறது சரி படத்தின் இரண்டாம் பாதி கதை எதிர்பார்க்கலாம் என்றால் அங்கும் இதே நிலைமைதான், இயக்குனர் சீனு ராமசாமி படத்தில் சினிமாத்தனம் இருக்கவே கூடாது என நினைத்து எதார்த்தமாக எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் கதையில் ஒரு ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் செய்துவிட்டார்.

படத்தில் பிடித்தது

உதயநிதி ஸ்டாலின் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார், அதேபோல் இயக்குனர் சீனு ராமசாமி படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே விவசாயம் பற்றியும், விவசாயிகள் சாகுவதை பற்றியும் கூறியுள்ளார்கள் அதேபோல் நீட் தேர்வை பற்றியும், முதியோர் இல்லம் பற்றியும் அவ்வப்போது பேசி உள்ளார்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில் கடைசியில் படத்தின் 30 நிமிட காட்சிகள் மட்டும்தான் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. மேலும் யுவனின் இசையில் ஒரு பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்கும் படியாக அமைந்தது. ஆக மொத்தத்தில் நிமிர் படம் பிடித்தவர்களுக்கு இந்த படமும் பிடிக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top