விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரொமான்டிக் ஜோடியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் கதிர்-முல்லை. எனவே இந்த ஜோடிக்கு போட்டியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா-கண்ணன் இருவரையும் வைத்து சீரியலின் இயக்குனர் தற்போது சுவாரஸ்யமான சில சம்பவங்களை அரங்கேற்றுகிறார்.
இருப்பினும் கண்ணனுடைய குழந்தைத்தனமான கதாபாத்திரத்திற்கு அது செட் ஆகவில்லை. எனவே ஐஸ்வர்யா, முல்லையை போட்டியாக நினைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் தன்னுடைய கணவன் கண்ணனுடன் வெளியில் சென்று வரலாம் என கிளம்புகிறாள்.
கடைக்குப் போனபோது கண்ணன் பணம் எடுத்து வராததால், ஜீவா வந்து அவர்களுக்கு காசு கொடுத்து உதவினார். அதன்பிறகு நடந்து வீட்டிற்கு வரலாம் என கண்ணனும் ஐஸ்வர்யாவும் வரும் வழியில் போலீஸ் ரோந்தில் ஈடுபட்ட கொண்டிருந்தது.
வாகன சோதனையில் இருந்த போலீசை பார்த்த கண்ணன் ஓட்டம் பிடிக்கவே, போலீஸ் துரத்தி பிடிக்கிறார்கள். அதன் பிறகு எதற்கு எங்களைப் பார்த்து ஓடுகிறாய்? என கண்ணனை கேட்டபோது, எல்லாம் ஒருவித பயம் தான் என ஐஸ்வர்யா விளக்கம் கூற, பிறகு போலீஸ் ஜிப்பிலே கண்ணன், ஐஸ்வர்யா வீட்டிற்கு வருகின்றனர்.
இருப்பினும் போலீஸ்க்கு லேசான சந்தேகம் இருப்பதால், வீட்டில் இருப்பவர்களுடன் பேச வேண்டுமென கேட்க, அந்த நேரம் ஜீவா தன்னுடைய மனைவி உடன் கண்ணனுக்காக போலீசிடம் பேச வருகின்றனர். இவ்வாறு ஐஸ்வர்யா ரொமான்டிக்காக கண்ணனுடன் இரவு நேரத்தில் சென்று வரலாம் என கிளம்பி, தற்போது சிக்கலில் மாட்டி விட்டது.
ஆகையால் கதிர்முலை ஜோடிக்கு போட்டியாக நிச்சயம் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடியாய் வரவே முடியாது என சின்னத்திரை ரசிகர்கள் கலாய்கின்றனர். இருப்பினும் இந்த ஜோடி இளம் ஜோடி என்பதால் சிலருக்கு பிடித்தமான ஜோடியாகவும் மாறி வருகிறது.