இந்த வயதில் இவ்வளவு பக்குவமா.. லட்சுமியை நினைத்து புல்லரித்துப் போன கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என தெரிந்த விஷயம் கண்ணம்மாவுக்கு தற்போது தெரிந்துள்ளது. அதை சௌந்தர்யாவிடம் கண்ணம்மா பகிர்ந்து கொள்கிறார்.

உடனே சௌந்தர்யா வீட்டில் உள்ள கேமராவை பார்க்கும்போது லட்சுமி வந்து எல்லா விஷயத்தையும் கேட்டது தெரியவருகிறது. ஆனால் எல்லா உண்மையும் தெரிந்த லட்சுமி இவ்வாறு அமைதியாக இருப்பதை நினைத்து சௌந்தர்யாவும், பாரதியின் தந்தையும் சந்தோஷம் அடைகின்றனர்.

இந்நிலையில் மறுநாள் கண்ணம்மா லட்சுமியை அழைத்து வீட்டுக்கு வருகிறாள். அப்போது எல்லாவற்றையும் விசாரிக்கும்போது எனக்கு முன்னாடியே பாரதிதான் என் அப்பா என்ன தெரியுமா என்று எல்லா விஷயத்தையும் லட்சுமி கூறுகிறாள். மேலும் அப்பா நம்மளை தள்ளி வைக்க என்ன காரணம் என கண்ணம்மாவை நச்சரிக்கிறாள்.

ஆனால் கண்ணம்மா இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என மழுப்புகிறாள். ஆனால் லட்சுமி எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அப்பா உனக்கு சீக்கிரமே விவாகரத்து தர போறாரு தானே. அன்னைக்கு ஹாஸ்பிடல் வரும்போது நீங்க ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன் என லட்சுமி கூறுகிறாள்.

உடனே அதைக் கேட்ட கண்ணம்மா லட்சுமி ஆரத்தழுவி கொள்கிறார். விவாரத்து விஷயம் வரை தெரிந்தும் இந்த வயதில் இவ்வளவு பக்குவம் உனக்கு எப்படி வந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற அழுகிறாள். இதனால் தற்போது பாரதி,கண்ணம்மா இடையே என்ன பிரச்சனை என்பது லட்சுமிக்கு தெரிய வர உள்ளது.

லட்சுமி தந்தையாக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டிக்க வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதனால் பாரதி மீது உள்ள அன்பு அப்படியே கோபமாக மாறவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு பல சுவாரசியமான கதைக்களத்துடன் பாரதிகண்ணம்மா தொடர் வரும் வாரங்களில் வர இருக்கிறது.

Next Story

- Advertisement -