எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கோங்க.. கண்ணம்மாவை பதற வைத்த அந்த கேள்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் லட்சுமிக்கு தனது அப்பா பாரதி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பல திருப்பங்கள் வர உள்ளது. லட்சுமி தனது தந்தை பாரதி என தெரிந்தவுடன், பாரதி உடன் நெருங்கி பழக தொடங்குகிறார். அதேபோல் பாரதியும் லட்சுமியை சொந்த மகள் போல் தான் பார்த்துக் கொள்கிறார்.

கண்ம்மாவுக்கும், பாராதிக்கும் திருமணம் செய்து வைக்குமாறு ஹேமா கேட்டதால் லட்சுமி கோபமாக இருந்தாள். தற்போது உண்மை தெரிந்த லட்சுமி தன் தங்கையாக ஹேமாவை பார்க்கிறாள். இந்நிலையில் ஸ்கூலில் ஹேமாவை அடிக்க ஒரு பெண் வந்த நிலையில் அதை தடுத்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிடுகிறார் லட்சுமி.

அதுமட்டுமல்லாமல் ஹேமாவுக்கு எதுனா நான் வந்து நிற்பேன் என லட்சுமி கூறுகிறாள். அப்போது சௌந்தர்யா அங்கு வர இருவரும் சகோதரிகள் என்று சொல்கிறார். நாங்கள் ஃபிரண்ட்ஸ் தான் எப்படி அக்கா, தங்கையாக இருக்க முடியுமென ஹேமா கேட்கிறாள். ஆனால் லட்சுமி இனிமே நம்ம ஃப்ரெண்ட்ஸ் இல்ல நான் அக்கா, நீ தங்கச்சி எனக் கூறுகிறார்.

அத்துடன் மீண்டும் பழையபடி இருவரும் ஒன்றாக உள்ளனர். அதன்பிறகு லட்சுமி தன் அப்பாவுடன் கைபிடித்து நடந்து போகனுவும், பைக்ல போகணும் என யோசிக்கிறார். இந்நிலையில் மதிய வேளையில் கண்ணம்மா சாப்பாடு எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்கு வருகிறார். அப்போது ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

இந்நிலையில் ஹேமா கண்ணம்மாவிடம் தன் அப்பாவை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை நீங்கள் எங்க அப்பாவை கல்யாணம் பண்ணுகிறீர்களா சமையல் அம்மா என்று கேட்கிறாள். இதைக்கேட்டு கண்ணம்மா அதிர்ந்து போகிறார். அதுமட்டுமல்லாமல் நான் தான் உன்னுடைய அம்மா என்று சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

லஷ்மிக்கு உண்மை தெரிந்த நிலையில் ஹேமா உடன் இணைந்து மீண்டும் கண்ணம்மா, பாரதிக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஹேமாவுக்காக பாரதி இறங்கி வரவும் வாய்ப்புண்டு. ஆனால் இதைத் எப்படியாவது தடுத்து நிறுத்த வெண்பா முயற்சி செய்வார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்