Connect with us
Cinemapettai

Cinemapettai

venba-kannamma

India | இந்தியா

ஆத்திரத்தில் அருவாமனையை கையில் எடுத்த கண்ணம்மா.. ஒருவழியாக போகும் வெண்பா

விஜய் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கிளைமாக்ஸை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதையுமே சட்டுபுட்டு என்ற முடிக்காமல் ஜவ்வாக இழுத்து வருகிறார் பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனர்.

டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வர தாமதம் ஆவதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாரதி முழித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் டெஸ்ட் ரிசல்ட் கண்ணம்மாவுக்கு சாதகமாக வந்துவிட்டால் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்பதில் பாரதி உறுதியாக இருக்கிறார்.

Also Read :இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கோபி.. கடைசியில இப்படி ஆயிடுச்சு

மேலும் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிய வெண்பா பாரதிக்கு போன் செய்து உடனே வர சொல்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் பாரதியும் வருவதாக சொல்லிவிட்டார். மண்டபத்தில் வெண்பாவை காணவில்லையே என அனைவரும் அழுது கூச்சலிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அப்போது நான் மட்டும் சும்மா இருந்தால் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடும் என வெண்பா வீட்டு வேலைக்காரி அதிகமாக கூச்சல் இடுக்கிறார். இதை பார்த்த கண்ணம்மா கண்டிப்பாக இவளுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்று அருவாமனையை அவரின் கழுத்தில் வைக்கிறார்.

Also Read :கிளைமேக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா.. கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்

அரண்டு போன வெண்பாவின் வீட்டு வேலைக்காரி வெண்பா அம்மா பாரதி ஐயாவை தான் கல்யாணம் பண்ணிக்க போகிறார் என்ற உண்மையை கூறிவிட்டார். இதைக் கேட்டு கண்ணம்மா உட்பட மண்டபத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் விஷயம் அறிந்த எல்லோரும் கோயிலுக்கு செல்ல உள்ளனர். அங்கு வெண்பாவை ஒரு வழியாக ஆக்கவுள்ளார் கண்ணம்மா. கடைசி நேரத்தில் கண்ணம்மாவுக்கு சாதகமாக டிஎன்ஏ டெஸ்ட் வந்து பாரதி, வெண்பா திருமணம் தடைபட உள்ளது. இதையடுத்து வெண்பா கழுத்தில் ரோகித் தாலிகட்ட உள்ளார்.

Also Read :ஆசையை எல்லாம் குழி தோண்டி புதைத்த ராதிகா.. நடுரோட்டில் சர்க்கஸ் காட்டும் புது மாப்பிள்ளை

Continue Reading
To Top