தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த கண்ணம்மா பாடல்கள்

பாரதி தனது மனைவியை செல்லமாக கண்ணம்மா என்று அழைத்ததாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிப்பது உண்டு. பெரும்பாலும், ஆண்கள் தங்கள் காதலிகளையும் அப்படியே அழைப்பதால் இன்று கண்ணம்மா என்ற வார்த்தையும் கோலிவுட்டில் படு பிரபலமாக இருக்கிறது. இந்த வார்த்தையை கொண்டு வெளியான பாடல்களும் பெரும்பாலும் சூப்பர்ஹிட்டாக அமைந்து விடுகிறது. அப்படி கண்ணம்மா எனத் தொடங்கி ஹிட் கொடுத்த டாப் பாடல் பட்டியல் இதோ உங்களுக்காக..!

KAALA

காலாவிற்கும், அவர் காதலி சரினாவிற்கும் இருக்கும் காதல் நினைவலைகளை சொல்லும் பாடல் கண்ணம்மா. ஒட்டுக்கொண்டு செய்தால் தான் ரொமான்ஸா? கண்ணே அதை பேசும் என்ற ரீதியில் இப்பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்தும், ஹீமா குரோஷியும் பாடலுக்கு பலமாக வலு சேர்த்து இருக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கண்ணம்மா தான் காதலர்களின் ரிங் டோனாகி இருக்கிறது.

அதிகம் படித்தவை:  மீண்டும் இணைந்த தனுஷ் - ஜி வி பிரகாஷ் கூட்டணி ! வாவ் செம்ம அப்டேட் .

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த ரிலீஸாக தயாராகி இருக்கும் படம் ஜூங்கா. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் கண்ணம்மா கன்ட்ரோலு பண்ணம்மா… என்ற பல்லவியுடன் தொடங்கும் `பாரீஸ் டு பாரிஸ்’ பாடல் தற்போதைய சமூக வலைத்தள ஹிட்டாகி இருக்கிறது. அந்தோணிதாசன் இப்பாடலை பாடி இருக்கிறார்.

தொலைக்காட்சியின் முகமூடியை கிழித்த படம் கவண். இப்படத்தில் இடம் பெற்ற பாடல் தீராத விளையாட்டுப் பிள்ளை. இப்பாடலில் பாரதியின் கண்ணம்மா கவிதை முதலில் பல்லவியாக இடம் பெற்று இருந்தது. தமிழ் ஆல்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் ஹிப் ஹாப் ஆதி இக்கவிதையை பாடலாக மாற்றி இருந்தார். ஆதி, அந்தோணிதாசன், பத்மலதா ஆகியோர் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

றெக்க படம் என்றாலும் பலர் மனதில் முதலில் ஓடுவது கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்ற பாடல் தான். மாலா அக்காவிற்காக பலரும் இப்பாடலை தங்களது ரிங்டோனாக செட் செய்தனர். யுகபாரதி இப்பாடலின் வரிகளை எழுதினார். இமான் இசையமைக்க, நந்தினி ஶ்ரீகர் பாடியிருந்தார்.

அதிகம் படித்தவை:  பல பாடல்களின் கலவையில் வெளிவந்த தமிழ்படம்2 படத்தில் சிவாவின் அறிமுக பாடல்.!

சிம்புவின் நடனத்தில் செம குத்து பாடலாக அமைந்தது கண்ணம்மா கண்ணம்மா மீனு விக்க போலாமா பாடல். தம் படத்தில் இடம் பெற்று இருந்த இப்பாடலுக்கு தேவா இசையமைத்து இருந்தார். அனுராதா ஶ்ரீராமும் உதித் நாராயணனும் இப்பாடலை பாடி இருந்தனர்.

விஜய் நடிப்பில் பலரது மனதை தொட்ட படம் பிரியமுடன். கௌசல்யாவிற்காக விஜயின் சிம்பிள் நடனத்தில் அமைந்த பாடல் பாரதிக்குக் கண்ணம்மா, நீ எனக்கு உயிரம்மா. காதலர்களின் எவர்க்ரீன் ஹிட்டாக இருக்கும் இப்பாடலுக்கு தேவா இசையமைத்து இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார்.

இதைப்போல, தமிழ் சினிமாவில் கண்ணம்மா என்ற வார்த்தையில் தொடங்கும் ஏகப்பட்ட பாடல்கள் ஹிட் பட்டியலில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது..