Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த சிம்புவின் ரீமேக் படம்.. பல அக்கப்போருக்கு பிறகு கமிட்டான சூர்யா பட இயக்குனர்!

தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை வேற லெவலுக்கு தட்டி தூக்கி கொண்டிருப்பவர் தான் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன்.

எனவே கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ‘முப்டி’.

இந்தப் படத்தை தமிழில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் கன்னட இயக்குனர் நார்தன் இயக்குவதற்கான படப்பிடிப்பிற்கான வேலைகள் கர்நாடகாவில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சிம்புவுக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சிம்பு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட்டார்.

அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இந்த படத்தை தொடங்குவதற்காக பல பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு சிம்பு அந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒத்துக் கொண்டார். ஆனால் இயக்குனர் நார்தன் அந்தப் படத்தை இயக்க விரும்பவில்லை என படத்திலிருந்து விலகிவிட்டார்.

அதன்பின் கடந்த வாரம் கிடைத்த தகவலின்படி நந்தா பெரியசாமி இந்த படத்தை மீண்டும் கையில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் செம ஹிட்டடித்த ‘ஜில்லுனு ஒரு காதல்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா, சிம்புவின் கன்னட ரீமேக் படத்தை இயக்கப் போவதாக தெரிகிறது.

simbu-krishna-cinemapettai

simbu-krishna-cinemapettai

எனவே சிம்பு, கிருஷ்ணா கூட்டணி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வித்தியாசமான படைப்பை ரசிகர்களுக்கு கொடுக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
To Top