கன்னட திரைப்படங்களின் குயின் என்று அழைக்கப்படும் நடிகை அமில்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஏராளமான கன்னட படங்களில் நடித்த அமில்யாவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் தனது நண்பர் ஜெகதிஷ் என்பரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இரு வீட்டார்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இராஜராஜேஸ்வரிங்கர், ஜி.ஹெச்.ராமச்சந்திராவின் மகன் ஜெகதிஷ் எம்.பி.ஏ பட்டதாரி. இவர் லண்டனில் உள்ளார்.இவரது தந்தை கர்நாடக அரசியலில் முக்கிய பிரமுகர் என கூறப்படுகிறது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் கணேஷ் மற்றும் அவரது மனைவி ஷில்பா உள்ளிட்ட ஒரு சில கன்னட நடிகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.