Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை ஓரம்கட்டிய ராகவா லாரன்ஸ்.. இந்த விஷயத்தில் லாரன்ஸ் தான் கெத்து.. இது என்ன புது சோதனை!
பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்களில் வெளிவந்து வசூலை அள்ளுவது வாடிக்கைதான், அதற்குப் பின்னர் சின்னத்திரையில் சேட்டிலைட் ரைட்ஸ் பெறுவதற்கு போட்டிகள் நடக்கும்.
அதிலும் விளம்பரங்களின் மூலம் நல்ல வியாபாரம் நடக்கும், இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடித்த அனைத்து படங்களுமே சின்னத்திரையில் மாபெரும் வரவேற்பு உண்டு.
அதனால் சன் டிவி போட்டி போட்டுக்கொண்டு டிஆர்பி ஏற்றுவதற்காக காஞ்சனா போன்ற பேய் படங்களை வாங்குவார்கள். கில்லி படத்தின் டிஆர்பியை விட காஞ்சனா படத்தின் டிஆர்பி கிட்டத்தட்ட தாண்டி விட்டதாம்.
அதாவது, 1 கோடி 28 லட்சத்தை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சின்னத்திரையில் ராகவா லாரன்ஸ் கிங்மேக்கர் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டார். காஞ்சனா சீரியஸ்ஸில் வெளிவந்த அனைத்து படங்களுமே பெண்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தளபதி ரசிகர்கள் இதனை ஒத்துக் கொள்ளவில்லை. கில்லி படம் வெளி வந்து 16 ஆண்டுகள் ஆகியும், சின்னத் திரையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒளிபரப்பப்பட்ட போது ஒரு கோடியே 34 லட்சம் தடப்பதிவுகளை பெற்றது என குறிப்பிட்டு வருகின்றனர்.
காஞ்சனா படத்தை பற்றி கிளப்பிவிட்டது அஜித் ரசிகர்கள் என்றும், இதனால் தல தளபதி ரசிகர்களுக்கு இடையே கலங்கத்தை மூட்டி சன் டிவி மற்றும் ராகவாலாரன்ஸ் குளிர் காய்கின்றனர் என்பது தான் கோடம்பாக்கம் வட்டாரங்களின் சலசலப்பு.

trp-ghilli
அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தான் தளபதி ரசிகர்களின் பதிவு!!
