kanitan-reviewஅதார்வா கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கெத்தரீன் தெரேசா, தருன் அரோரா, பாக்யராஜ் மற்றும் கருணாகரன் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் டி.என். சந்தோஷ் இயக்கத்தில், டிரம்ஸ்  சிவமணி இசையமைக்க, அரவிந்த்  கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில்  கலைப்புலி தாணு  தயாரித்தப் படமே இந்த “கணிதன்”.

கதை 

பி.பி.சி. டிவி சேனலில்  வேலை செய்யவேண்டும் எனும் ஆசையில் உள்ள அதர்வா, ஒரு சாதாரண ஸ்கை டிவில் வேலைப்பார்த்து வருகிறார். ஒரு ரிப்போர்டிங் வேலையாக பப்பிற்கு செல்லும் அதர்வா, அங்கு கெத்தரீன் தெரேசாவிடம் தான் பி.பி.சி. ரிப்போர்டர் என பொய் சொல்லி அறிமுகமாகிறார்.

இருப்பினும் அதர்வா வேலை செய்யும், டிவியின் உயர் அதிகாரியின் மகளான அவர் அதர்வாவின் பொய்யை கண்டு பிடித்துவிடுகிறார். பின் இருவரும் காதல் வயப்படுகின்றனர். இந்நிலையில் பி.பி.சி வேலைக்கு தேர்வாகும் அதர்வா, திடிரென போலிஸாரால் கைது செய்யப்படுகிறார்.

அவரோடு வேறு சிலரும் கைது செய்யப்படவே, காரணம் கேட்கும் அதர்வாவிடம் அவர் போலி டிகிரி செர்ட்டிபிக்கட் மூலம் ஐந்து வங்கியில் 13 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாக குற்றம் சுமத்தி அவர்களின் கல்வி தகுதியை கோர்ட் ரத்து செய்கிறது. இதில் போலி டிகிரி செர்ட்டிபிக்கட் செய்பவரை கண்டுபிடிப்பதும், பழிவாங்குவதுமே மிகுதிப்படம்.

விமர்சனம் 

அதர்வா தனக்கே உரித்தான இயல்பான காமெடி கலந்த நடிப்பை காட்டி இருக்கிறார். சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.கதைக்கேற்ற மாஸை அவர் காட்டியுள்ளதோடு கருணாகரனுடன் டைமிங் காமெடியில் கலக்கியுள்ளார் என கூறலாம்.

தெரேசா தன் பங்கிற்கு கவர்ச்சியை வாரிவழங்கி நடித்திருக்கிறார்,முதல் பாதி நன்றாக செல்கிறது படத்தின் குறையே இரண்டாம் பத்தி தான். ஏனேன்றால் மீண்டும் மீண்டும் ஒரே சீன் வருவதால் எரிச்சல் தான் வருகிறது. போலி சர்டிபிகட் தயாரிபவனை கண்டுபிடிக்க ஹீரோ அதர்வா தானே வில்லனிடம் சென்று போலி சர்டிபிகட் கேட்கிறார். மீண்டும் கும்கி அஷ்வினை அதே பாணியில் அனுப்பி வில்லனிடம் போலி சர்டிபிகட் கேட்கிறார். போலி சர்டிபிகட் விஷயம் ஏற்கனவே போலீஸ், டிவி, நியூஸ் பேப்பர் என்று தமிழ்நாடு முழுவதும் தெரியவந்தாலும், இந்த கும்பல் பயமே இல்லாமல் மீண்டும், மீண்டும் போலியா சர்டிபிகட் ரெடி பண்றன்களாம். இந்த போலி கும்பலை போலீஸ் தேடவில்லையாம். ஹீரோ தான் தேடி தேடி கண்டுபிடிகிராறாம். அதுவும் தமிழ்நாடு முழுவதும் வில்லனால் போலி சர்டிபிகட் பெற்று வேலை செய்யும் அனைவரையும் கண்டுபிடிகிறாராம் நாம ஹீரோ. பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது

சிறப்பு 

ஊடகம் சார்ந்த கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் சந்தோஷுக்கு பாராட்டு. படத்தில் ஒளிப்பதிவாளர் அரவிந் கிருஸ்ணா பல்வேறு கோணங்களில் சாட்களை வைத்து படத்தை அசத்தியுள்ளார். அதற்கேற்ப படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் சிறப்பான படத்தொகுப்பை வழங்கியுள்ளார் எனலாம்.

மொத்தத்தில் இந்த “கணிதன்” Above Average  சொல்லலாம் .

ரேட்டிங் – 2.5/5