தமிழிசையை இப்படி கலாய்த்து விட்டாரே கனிமொழி

தூத்துக்குடி: தமிழிசை ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயித்து விட்டு இப்படி பேசினால் பரவாயில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட வேலூர் தொகுதியில் திமுக வாக்கு வித்தியாசம் மிக குறைவு. இது திமுகவிற்கு வெற்றி கிடையாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தொிவித்தது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி , ஏதாவது ஒரு தொகுதியில் அவர் வெற்றி பெற்று விட்டு அவா் இப்படி பேசினால் பரவாயில்லை என்றார்.

எனக்கு தெரிந்து திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

Leave a Comment