Connect with us
Cinemapettai

Cinemapettai

kaniha-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கனிகாவின் அந்த இடத்தை அசிங்கமாக வர்ணித்த ரசிகர்.. மேடம் கொடுத்த செருப்படி பதிலடி

2002 ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கனிகா. அதன் பிறகு எதிரி, அஜித்துடன் வரலாறு போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

எப்படியும் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்து விடலாம் என எதிர்பார்த்தவருக்கு தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் கொஞ்ச காலம் அங்கேயே செட்டிலானார்.

ஒரு கட்டத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலான கனிகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழில் கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன.

கனிகா பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய 39 வயதிலும் இளமையான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல் இந்த மாதிரி புகைப்படங்கள் வெளியிடும் போது சில ரசிகர்கள் அத்துமீறி கமெண்ட் செய்வதும் உண்டு. அந்த மாதிரி சமயத்தில் ரசிகர் ஒருவர் கனிகாவின் அந்த இடம் பெரிதாக இருப்பதாக கூறி கிண்டலடித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் இப்படி எல்லாம் உடை அணியலாமா? எனவும் ரசிகர்கள் அவர் மீது விமர்சனங்களை வைத்தனர். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், என்னுடைய 50 வயதில் கூட நான் இந்த மாதிரி உடை அணிவேன், மேலும் என்னுடைய பையனுக்கு உடைகளில் தப்பான விஷயம் இல்லை என்பதை உணர வைப்பேன் எனவும் கூறி அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

kaniha-cinemapettai

kaniha-cinemapettai

Continue Reading
To Top