சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கலர் கலரா ரீல் சுத்துன கங்குவா டீம்.. பழசை கிளறி வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் பிரபலம்

Kanguva: கடந்த 14ஆம் தேதி வெளிவந்த கங்குவா படத்திற்கு தற்போது அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. அதிகபட்ச இரைச்சலாக இருக்கிறது என்பதுதான் படத்தை பார்த்தவர்களின் மனக்குமுறலாக இருக்கிறது.

அதைத் தாண்டி சிலர் திரைக்கதை சரியில்லை என குறிப்பிடுகின்றனர். ஆனால் சூர்யாவின் நடிப்பை பற்றி எந்த குறையும் இல்லை. அவர் இன்னும் கொஞ்சம் யோசித்து கதையை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்ற ஆதங்கம் மட்டும் தான் ரசிகர்களிடம் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க படம் தற்போது மீம்ஸ் மெட்டீரியல் ஆகவும் மாறி இருக்கிறது. இந்தியன் 2 படத்தை எந்த அளவுக்கு கலாய்த்தார்களோ அதைவிட அதிகமாக இப்படம் கலாய்க்கப்பட்டு வருகிறது. அதில் ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு வச்சு செய்து வருகிறார்.

அதன்படி தற்போது அவர் கங்குவா பட ரிலீசுக்கு முன்பு பட குழுவினர் கலர் கலராக ரீல் சுற்றிய மெமரிசை பதிவிட்டுள்ளார். இதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் 2000 கோடி வசூலிக்கும். தமிழ் சினிமாவின் முதல் ஃபான் இந்தியா ஹிட் படம் இதுதான்.

blue sattai maran
blue sattai maran

கங்குவா படத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

படத்தில் 2.10 நிமிடங்கள் புல்லரிக்க வைத்து விடும். 38 மொழிகளில் 11500 ஸ்கிரீன்களில் வெளியாகிறது. விரைவில் வெற்றி விழாவில் சந்திப்போம் என கூறியிருந்தார். அதேபோல் இயக்குனர் சிறுத்தை சிவா இது கட்டுப்படுத்த முடியாத காட்டாறு.

சூர்யா சார் மரத்தில் ஏற வேண்டும் என்று சொன்னால் சரசரவென ஏறி விடுவார். இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை காட்சிகள் படத்தில் உண்டு என ஹைஃப் ஏற்றி இருந்தார். மேலும் போஸ் வெங்கட் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு பிட்டை போட்டு இருந்தார்.

அதேபோல் கருணாஸ் சூர்யா தான் உலகிலேயே சிறந்த நடிகர் என கூறினார். இது எல்லாவற்றிற்கும் மேலாக மதன் கார்க்கி படத்தை 100 முறை பார்த்து விட்டேன் எனவும் இசையமைப்பாளர் திரை தீப்பிடிக்கும் என கொஞ்சம் அதிகமாகவே பேசி இருந்தனர்.

மேலும் சூர்யா படம் நெருப்பு மாதிரி இருக்கும் என கூறினார். அதேபோல் சிறப்பு விருந்தினராக பட விழாவுக்கு வந்த ராஜமவுலி சூர்யா தான் பாகுபலி படத்தின் இன்ஸ்பிரேஷன் என ஒரே போடாக போட்டார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் X தளத்தில் எலான் மஸ்க் லைக் பட்டனை கங்குவா ஐகான் போல் மாற்றி விட்டார் என அலப்பறை செய்தனர். இப்படி ஆரவாரம் செய்யப்பட்ட கங்குவா தற்போது கிண்டலடிக்கப்படுவதை ப்ளூ சட்டை மாறன் சுட்டிக்காட்டி உள்ளார்.

- Advertisement -

Trending News