செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கங்குவா வசூல் எதிரொலி, இசையமைப்பாளருக்கு செக்! குட் பேட் அக்லியில் அஜித்தின் முடிவு

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படத்தில் திஷா பதானி, கிங்ஸ்லி, நட்டி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை பிரமாண்டமாய் தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்கள் குவிந்ததால் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தியா சினிமாவிலேயே ஒரு மறக்க முடியாத படமாக கங்குவா அமைந்துவிட்டது. இப்படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும் கோலிவுட்டில் இருந்து இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்ததற்கு அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.

அப்படித்தான் சூரி, சுசீந்தரன், ஜோதிகா, மாதவன் உள்ளிட்ட அனைவருமே கங்குவாவை பாராட்டி வருகின்றனர். ஆனால், இப்படத்திற்கு இத்தனை விமர்சனங்கள் வந்த போதிலும் ஏன் இன்னும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும், இசையமைப்பாளர், சவுண்ட் இன்ஜினியர் சார்ப்பில் எந்த விளக்கமும் வரவில்லை என்றுதான் கேள்வியாக உள்ளது.

கங்குவா எதிரொலியால், இசையமைப்பாளரை தூக்கும் குட் பேட் அக்லி படக்குழு?

இந்த நிலையில், அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் குட் பேட் அக்லி. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வந்தார். ஆனால், கங்குவா படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள், தியேட்டரில் ஒலி அமைப்பு சரியில்லை இதெல்லாம் புகார்களாக குவிந்தத நிலையில் தேவிஸ்ரீ பிரசாத்தை நீக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. ஆனால், இதுபற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடவில்லை.

எனவே தேவி ஸ்ரீபிரசாத்துக்குப் பதிலாக அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே கூலி, விஜய் 69, தேவரா 2, விடாமுயற்சி எனப் படங்களில் அனிருத் பிஸியாக இருப்பதால் அவர் குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

எல்லா படத்துக்கும் இசையமைப்பும், பாடல்களும், பின்னணி இசையும் முக்கியமானது. ஆனால் பிரமாண்டமாக படமெடுத்துவிட்டு, இசையில் கோட்டைவிட்டால் அதற்கு ரசிகர்கள் எதிற்வினை ஆற்றக்கூடும் என்பதால் அஜித்தும் படக்குழுவும் இதுபற்றி யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News