புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கங்குவா படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி உண்டா ? இவங்க மனசு வச்சா கண்டிப்பா உண்டு

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், பூஜா ஹெக்டேட், திசா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஷூட்டிங் முடிந்து, இப்போது ரிலீஸ் செய்ய தயார் நிலையில் உள்ளது.

38 மொழிகளில் 3 தொழில் நுட்பத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் போஸ்டர், டிரைலர், டீசர், 2 சிங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என கேள்வி எழுந்தன.

4 மாநிலங்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

இந்த நிலையில், கேரளம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர். அதேபோல் தமிழ் நாட்டிலும் அதேபோல் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

எனவே இதுகுறித்து படக்குழு, அதிகாலை 4 மணிக்கு காட்சி தொடங்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். அரசு ஒப்புதல் அளித்தால் அதிகாலை காட்சி வர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கங்குவா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News