கங்குவாவுக்கு மரண பயத்தை காட்டிய வேட்டையன்.. ரிலீஸ் தேதியோடு வெளியான வேட்டையன் போஸ்டர்

Vettaiyan: மே மாதத்திற்கு பிறகு கோலிவுட் பரபரப்பாக இருக்கிறது. அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் டாப் ஹீரோவின் படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அரண்மனை 4, கருடன், மகாராஜாவில் தொடங்கி இப்போது தங்கலான் வரை அனைத்துமே ஹிட் தான்.

இதில் எதிர்பாராமல் மொக்கை வாங்கியது இந்தியன் 2. ஆனால் மூன்றாம் பாகம் தரமாக இருக்கும் என ரசிகர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் இருக்கின்றனர். அதை தொடர்ந்து அடுத்த மாத வரவாக கோட் தயார் நிலையில் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது அதேபோன்று அக்டோபர் 10ம் தேதி சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியின் கங்குவா வெளிவர இருக்கிறது. இந்த ட்ரெய்லரும் வெளியாகி சாதனை படைத்தது.

ரிலீஸ் தேதியோடு வெளியான வேட்டையன் போஸ்டர்

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் பட ரிலீஸ் எப்போது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. ஏற்கனவே இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

vetaiyan
vetaiyan

அதைத்தொடர்ந்து கங்குவா 10ம் தேதி ரீலீஸ் என்பதால் தீபாவளியை முன்னிட்டு வேட்டையன் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதற்காகவும் நான் பின்வாங்க மாட்டேன் என சொல்வது போல் சூப்பர் ஸ்டார் அதே 10ம் தேதியை தற்போது லாக் செய்துள்ளார்.

இது எதிர்பாராத ட்விஸ்ட் தான். சிங்கிளாக கலெக்ஷனை அள்ளலாம் என எதிர்பார்த்த கங்குவா இதனால் மரண பீதியில் இருக்கிறது. இரண்டுமே டாப் ஹீரோக்களின் படங்கள் என்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம்.

முன்னதாக கடந்த 2021 தீபாவளியின் போதும் சூர்யாவின் ஜெய் பீம் ரஜினியின் அண்ணாத்த படங்கள் வெளியானது. இதில் ஜெய் பீம் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். ஓடிடியில் நேரடியாக வெளியானது.

அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இது தியேட்டரில் வெளியானது. இப்போதும் அதே டீம் தான் மோத இருக்கிறது. ஆனால் இயக்குனர்கள் இப்போது மாறி இருக்கின்றனர். இதுவும் ஒரு சுவாரசியமாகத் தான் இருக்கிறது.

கங்குவாவோடு மோதும் வேட்டையன்

Next Story

- Advertisement -