Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

ஜெயலலிதாவின் xerox ஆக மாறிய கங்கனா- வைரலாகுது சட்டசபை ஷூட்டிங் போட்டோஸ்

ஏ எல் விஜய் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை (தாம் தூம்) கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.

விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரெடியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

kangana as thalaivi

கொரோனாவின் தாக்கம் கிறைந்து பல படங்களின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகிவிட்டது. இந்த தலைவி படக்குழுவும் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டனர். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

kangana and jayalalitha

இந்த படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தளவுக்கு கதாபாத்திர ஒற்றுமை உள்ளது என புகழ்ந்து வருகின்றனர்.

Continue Reading
To Top