நானே சிறந்த நடிகை, ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிட்டு கங்கனா பதிவிட்ட மாஸ் போட்டோ.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கங்கனா நம் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் ஜோடி சேர்ந்தவர். கோலிவுட்டை விட்டு இவர் சென்றாலும் பாலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவர்.

நல்ல கதையம்சம், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்கள் என தேர்ந்தெடுப்பது இவர் ஸ்பெஷாலிட்டி. பல விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகையாக இவர் சிறப்பு தான் எனினும் அவ்வப்பொழுது இவர் பதிவிடும், அல்லது பேசும் விஷயங்கள் தான் இவரை சர்ச்சையில் சிக்க வைத்து விடும்.

இவர் நடிப்பில் அடுத்ததாக இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. விஜய் இயக்கத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களின் பயோபிக் தலைவி, அடுத்தது முழு அதிரடி ஆக்ஷனில் இவர் அக்னி என்ற ரோலில் நடிக்கும் தக்கட். இந்த இரண்டு போட்டோக்களை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

kanagana ranaut in thalaivi thakkad

மேலும் ” உருமாற்றத்தில் வேற விதம்., இந்த உலகில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு எந்த நடிகையும் இந்த அளவிற்கு மாற்றத்தை காண்பித்ததில்லை. விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மெரில் ஸ்ட்ரிப் போலவும், ஆக்‌ஷன் மற்றும் கவர்ச்சியில் கேல் கடாட் போலவும் என்னால் நடிக்க முடியும்.”

“நான் வெளிப்படையாக சவால் விடுக்கிறேன், இந்தப் பிரபஞ்சத்தில் என்னை விட கலைத் திறமை கொண்ட நடிகையை யாரேனும் காட்டினால், அப்போது நான் என்னுடைய ஆணவத்தை கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்கு தான்” என பதிவிட்டார்.

சும்மாவே இவரை கிழிக்கும் நெட்டிசன்கள் கமெண்டில் சரமாரியாக பதில் போட ஆரம்பித்தனர். எதற்கும் சளைத்தவர் இல்லையாயிற்றே கங்கனா இவர் சொல்லிய பதில்கள் பின்வருமாறு …

kangana tweet

“நான் டாம் க்ரூஸ் அவர்களை விட சிறப்பாக ஸ்டண்ட் புரிவேன், மார்லின் பிராண்டோ ஆஸ்கார் பெற்றது போல நான், பிலிம் பார் விருதுகள் பெற்றுள்ளேன். மெரில் ஸ்ட்ரிப் எத்தனை தேசிய மற்றும் பத்ம விருதுகளை பெற்றார் என பார்த்தால் ஒன்றுமே இல்லை தான்.” இதுபோல வரிசை கட்டி ட்விட்டரில் பதிவிடும் இவரை, நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊதுகின்றனர்.