Tamil Cinema News | சினிமா செய்திகள்
போர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி ! வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
மணிகர்னிகா
ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக கொண்டு ரெடியாகி உள்ள படம் தான் மணிகர்னிகா. சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பை பிரதானப்படுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Kangana Ranaut
இதில் லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளார். பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.

Manikarnika
இந்நிலையில் இன்று முதல் அதிகாரபூர்வ போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படம் 2019 ஜனவரி 26 ரிலீசாகிறது.
