fbpx
Connect with us

Cinemapettai

என் பிள்ளைகளாக இருந்தால் இதைதான் செய்வேன் கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என் பிள்ளைகளாக இருந்தால் இதைதான் செய்வேன் கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி.!

ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இவர் தமிழில் அதிகம் கவனம் செலுத்தவில்லை ஆனால் இந்தியில் கவனம் செலுத்தி முன்னணி நடிகையானார்.

இவர் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இவர் எப்போதும் ஏதாவது பேசி சர்ச்சையில் அதிகம் சிக்குவார். இதற்க்கு முன் இவர் பேசிய பேட்டியில் பிரபலங்களின் வாரிசு சினிமாவுக்குள் எளிய முறையில் நுழைகிறார்கள் என்று கூறியதால் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதையடுத்து தற்போது உங்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்கள் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டனர்.

அதற்கு கங்கனா ரனாவத் என் பிள்ளைகளுக்கு சினிமாவில்  நுழைவதற்கு 50% உதவி செய்வேன் ஆனால் சினிமாவில் வெற்றி பெற்று வலம் வருவதற்கு அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top