Tamil Cinema News | சினிமா செய்திகள்
வியாபாரத்தில் விஜய், அஜீத்தை தூக்கி சாப்பிட்ட கங்கனா ரணாவத்.. OTT விலை கேட்டு அதிர்ந்த கோலிவுட்
தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரின் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் வியாபாரம் இருப்பது தெரிந்த விஷயம்தான்,.
இவர்கள் இருவரையும் சத்தமில்லாமல் பிரபல நடிகை ஒருவர் வியாபாரத்தில் ஓரங்கட்டியது தமிழ் சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவான தாம்தூம் படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத்(Kangana Ranaut).
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தப் படங்களும் கோடிகளில் வசூல் சாதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏ எல் விஜய் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி பெயரில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைவி படத்தின் OTT வியாபாரம் மட்டும் சுமார் 55 முதல் 70 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

thalaivi-kangana-ranaut
விஜய் அஜித் படங்களின் டிஜிட்டல் உரிமையே 15 கோடியை தாண்டாத நிலையில் ஒரு நடிகையின் படம் இவ்வளவு வியாபாரம் ஆகிறதா என அனைவரையும் மிரள வைத்துள்ளது. கங்கனா ரனாவத்திற்கு ஹிந்தியில் பெரிய வியாபாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

kangana-ranaut
