ஹிந்தி சினிமாவை ஆட்டிப்படைக்கக் கூடிய ஒரு நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். ஹிந்தியில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 5 தேசிய விருதுகள் வாங்கி உள்ளார்.
சமீபகாலமாக கங்கனா ரனாவத் அவரது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான அனுபவங்களை பல பேட்டிகளிலும், பல மேடைகளிலும் கூறி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தித் திரையுலகில் நடக்கும் பல அவலங்களையும் கங்கனா வெளிப்படையாகவே தெரிவித்து பல சிக்கல்களுக்கு உள்ளானார்.
தாம்தூம் படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்பு கிடைக்காமல் இவரது தாய் தேசமான ஹிந்திலேயே குடியேறினார்.
தற்போதுதான் மீண்டும் தமிழில் கொடி கட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக எடுத்துள்ள தலைவி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சிலகாட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் பலரும் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவே வாழ்ந்துள்ளார் எனவும் புகழ்ந்து தள்ளினர்.
தொடர்ந்து சினிமாவில் தனது நடிப்பின் மூலம் எந்த அளவுக்கு வெற்றி இவரது வாழ்க்கையில் வருகிறதோ, அதே அளவிற்கு பல சர்ச்சைகளும் இவரது வாழ்க்கையில் வந்து போவது இயல்பாகவே உள்ளது.

அந்த மாதிரி தற்போது கங்கனா ரனாவத் சட்டை பட்டன் முழுவதும் திறந்தபடி ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஒரு சில விதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சட்டையில்பட்டன் தான் அவ்வளவு இருக்கிறதே ஏன் போடாமல் இருக்கிறீர்கள் எனவும் கேலி செய்யும் வகையிலும் விமர்சனம் செய்து வருகின்றனர்.