Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிலீஸ் தேதி அறிவித்தம் சிக்கலில் தலைவி.. விழி பிதுங்கி நிற்கும் படக்குழு
இயக்குனர் ஏ .எல் விஜய் இயக்கத்தில் விஷ்ணு இன் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம்தான் தலைவி. இத்திரைப்படம் நடிகையும் ,முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாகும்.
இத்திரைப்படத்தில் கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .மேலும் அரவிந்த்சாமி, பூர்ணா ,பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜெ ஜெயலலிதாவின் உண்மை கதையினை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஒரு வரலாற்றுப் படமாக தலைவி திரைப்படம் உருவாகியுள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

thalaivi
திரையரங்குகளில் வெளிவரும் தலைவி திரைப்படம் இரண்டு நாள் இரண்டு நாட்களுக்கு பிறகு OTTயில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதை திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியான அடுத்த இரண்டு நாளிலே OTT யில் வெளியாகாமல் ஒரு மாதம் கழித்து வெளியிடுமாறு கூறியுள்ளனர்.
மேலும் மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டங்களுக்குப் பிறகுதான் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தலைவி பட ரிலீஸில் பல தலைவலிகளை சுமந்து கொண்டிருக்கிறது.
