‘பத்மாவத்’ படத்திற்கு எதிர்ப்பு வந்ததுபோல், கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மணிகர்னிகா’ என்ற படத்திற்கு தற்பொழுது எதிர்ப்பு கிளம்பியுள்ள சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மாவத்

Padmavat

50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் ரிலீஸாகிவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தும் பத்மாவதி கதை !

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் , தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாக இருந்த பத்மாவதி திரைப்படம் பத்மாவத் ஆனது . கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர், பல போராட்டங்கள் நடத்தினர். மேலும் ராணி பத்மினியாக நடித்த தீபிகா படுகோனே தலைக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்த சம்பவம் ஊர் அறிந்த விஷயம் தான்.

மணிகர்னிகா

manikarnika

ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையை மையமாக கொண்டு ரெடியாகும் படம் தான் மணிகர்னிகா. சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பை பிரதானப்படுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் லட்சுமி பாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார்.

Kangana Ranaut

இன்நிலையில் மணிகர்னிகா படத்தில் வீரமங்கை ராணி லட்சுமிபாயின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த இங்கிலாந்து ஏஜெண்டுக்கும் காதல் ஏற்படுவதுபோல் காட்சி வைத்து இருப்பதாகவும் சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் பத்மாவத் படத்துக்கு நேர்ந்த கதிதான் மணிகர்னிகா படத்துக்கும் ஏற்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

kangana-ranaut- manikarnika

மராட்டிய தளபதி சதாசிவராவ் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளார். பாகுபலி படத்துக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் படக்குழு.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு பத்மாவதி படத்தை திரைக்கு கொண்டு வந்தது. இந்த படத்தின் நிலை என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.