நீ திரும்ப அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி.. அரசியல்ல நிக்க கூட இடம் இல்ல, பேசாம படத்தையாவது நடிப்போம்!

கங்கனா ஒரு நல்ல நடிகை, ஆனால் நாக்கில் சனி. அது சினிமாவில் இருந்தபோதும் அப்படி தான், அரசியலுக்கு சென்ற பிறகும் அப்படி தான். அரசியலுக்கு போனப்றம், அம்மணி பளார் ன்னு அடியும் வாங்கிட்டாங்க. ஒரு பக்கம், கங்கனா க்கு அரசியல் பண்ண தெரியல என்று நிறைய பேர் விமர்சிக்க தான் செய்கிறார்கள். பாஜக-வே “அம்மா, கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இரும்மா” என்று சொல்லும் அளவிற்கு சென்று விட்டார்.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் எம்.பி-யும், நடிகையுமான கங்கனா ரனாவத் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில், விவசாயிகள்தான் நமது பலம். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும் பரவாயில்லை. மூன்று வேளாண் சட்டங்களை, விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நான் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்க்கு, அரசியலுக்கு புதிது என்பதால் கங்கனா ரணாவத்துக்கு அரசியல் புரிய நாளாகும் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் கூட நக்கலடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, எமெர்கெனசி படம் வெளியாகுமா ஆகாதா என்ற கேள்வியும் இருக்கிறது. இந்த நிலையில், ஒரு சில கட்களை மட்டும் நீக்கிவிட்டு, படத்தை வெளியிடலாம் என்று சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

இப்படி பட்ட சூழ்நிலையில், மாதவனுடன் ஒன்றிணைய போகிறார் கங்கனா ரனாவத். எ.எல் விஜய் இயக்கத்தில் இந்த படம் உருவாக போகிறதாக தகவல் கிடைத்துள்ளது. தலைவி படத்திற்கு பிறகு, மிஷன் சாப்டர் 1 படத்தை எடுத்தார். இந்த நிலையில், அவருடைய அடுத்த நகர்வு பற்றி எந்த தகவலும் வராமல் இருந்தது.

தற்போது, எ.எல் விஜய் கங்கனா ரனாவத், மாதவனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இந்த படத்திற்கு லைட் என்னும் டைட்டில் வைக்க பட்டுள்ளது. இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த ஜோடி, தனு வெட்ஸ் மனு என்ற ஒரு படம் நடித்திருந்தது. தற்போது, இரண்டாவது முறையாக இவர்கள் ஜோடி சேரப்போகிறார்கள்.

அறிவிப்பு வந்ததிலிருந்தே, அரசியல்ல எப்படியும் நிலை நிற்க்க போவதில்லை. “நீ மறுபடியும் அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி ” என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News