காஞ்சனா ஹிந்தி ரீ மேக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். காரணம் என்ன தெரியுமா ?

லாரன்ஸ் ரோலில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமாரின் திருநங்கை ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கிரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக விவேகம், விஸ்வாசம் படங்களில் பணியாற்றிய வெற்றி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அக்‌ஷய் குமார் பெண் மேக்கப் செய்வது போல முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

Laxmi bomb

இந்நிலையில் நேற்று இறைவாக்கு தன் ட்விட்டரில் லாரன்ஸ் மாஸ்டர் “நண்பர்கள் மற்றும் ரசிகர்களே , இவ்வுலகில் பணம், புகழை விட சுய மரியாதை மிக முக்கிய, அது ஒருவனின் குணாதிசயத்தை உணர்த்தும். அதனால் நான் லக்ஷ்மி பாம் படத்தில் இருந்து விலகுகிறேன்.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

மேலும் மதியாதார் தலை வாசல் மித்யாதே என் ஒரு பழமொழி உண்டு. நான் படத்தில் இருந்து விளக்க பல காரணம் உள்ளது, அதில் ஒன்று எனக்கு தெரியாமலே வெளியான முதல் லுக் போஸ்டர். மூன்றாவது மனிதன் ஒருவன் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. இயக்குனராக எனக்கு மிகுந்த வலியை தந்தது. படைப்பாளியாக அந்த போஸ்டர் எனக்கு பிடிக்கவில்லை. இது போல எந்த இயக்குனருக்கும் நடக்கக்கூடாது.

ஒப்பந்தம் ஏதும் கை எழுத்து ஆகவில்லை, எனவே நான் ஸ்க்ரிப்ட் தர்மால் இருக்கலாம், ஆனால் நான் அவ்வாறு செய்ய போவதில்லை. அக்ஷய் குமார் அவர்கள் மீது நான் தனிப்பட்ட முறையில் மரியாதையை வைத்துள்ளேன். யாரை வேண்டுமானாலும் இயக்குனராக வைத்த உழவர்கள் தொடரட்டும். விரைவில் அவரை சந்தித்து ஸ்கிரிப்ட் கொடுத்துவிட்டு நல்ல முறையில் படத்திலிருந்து வெளியேறுவேன். படக்குழுவுக்கு ஆல் தி பெஸ்ட் மற்றும் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் எனவும் சொல்லியுள்ளார்.

Leave a Comment