Tamil Cinema News | சினிமா செய்திகள்
கவர்ச்சி + மிரட்சி! சர்ச்சையை தவிர்க்க புதிய தலைப்புடன் காஞ்சனா ரீமேக் போஸ்டர் வெளியானது
மாஸ்டர் ராகவா லாரென்ஸின் சூப்பர் ஹிட் பட வரிசை தான் காஞ்சனா. முனி 2 / காஞ்சனா படம் பாலிவுட்டில் லக்ஷ்மி பாம் என ரிமேக் ஆனது. அக்ஷய் குமார், கிரா அத்வானி நடிப்பில் ரெடி ஆகியுள்ளது.
இப்படத்தின் போஸ்டர் முன்பு வெளியானது. போஸ்டர் வெளியிட்டது தனக்கு தெரியாது என்றும் மரியாதை குறைவான இடத்தில் நான் வேலை பார்ப்பதில்லை என்றும் தயாரிப்பாளரிடம் நேரடியாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துவிட்டார். பின்னர் சமரசம் ஆகி ப்ரொஜெக்டை தொடர்ந்தார்.

laxmmi-bomb
தியேட்டர்கள் அனைத்தும் முழு வீச்சுடன் திறக்கப்படவில்லை, எனவே பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றது. லக்ஷ்மி பாம், படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில் நவம்பர் 9ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கர்னி சேனா என்ற அமைப்பு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். லட்சுமி தேவியை களங்கப்படுத்துவது போன்ற டைட்டிலை மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

laxmi
எனவே இன்று லக்ஷ்மி என்ற புதிய தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் லைக்ஸ் குவித்து வருகின்றது.
