Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் காஞ்சனா 3,இதற்கு முன் முனி காஞ்சனா காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது இந்த வகையில் தற்போது காஞ்சனா 3 உருவாகி வருகிறது.
இந்த நிலையில் காஞ்சனா 3 அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, படத்தை ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராகவேந்திரா ப்ரொடக்ஷன் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் முனி முதல் பாகத்தில் நடித்த வேதிகாவும் மற்றும் பிக்பாஸ் புகழ் ஓவியாவும் நடித்து வருகிறார்கள் விரைவில் இதன் படப்பிடிப்பு முடியும் நிலையை எட்ட இருக்கிறது இந்த நிலையில் தற்போது படத்தை அடுத்த வருடம் 2019 ஏப்ரல் 18ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள் மேலும் விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ஆகியவை ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
