Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிரட்ட வருகிறது காஞ்சனா-3.. இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

ராகவா லாரன்ஸ் பேய் படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். முனி படத்தில் இவரது வெற்றி தொடங்கியது அதன்பின் வந்த காஞ்சனா, காஞ்சனா-2 தற்போது வெளியாகவுள்ள காஞ்சனா-3.
இந்த படத்தில் ராகவா லாரன்சுடன் ஓவியா, கோவை சரளா, மனோபாலா, சத்யராஜ், சூரி மற்றும் யோகி பாபு போன்ற ஒரு காமெடிப் பட்டாளமே இணைந்துள்ளனர்.
இந்த படம் முழுமையாக ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும் தற்போது ப்ரமோஷன் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Press release just now that #Kanchana3 will be released on April 19, the very next day after elections here in TN.. @offl_Lawrence horror comedy franchise on the way this summer.. #Muni4
— Cinemapettai (@cinemapettai) March 12, 2019
