அடுத்த வித்தியாசமான சயின்டிபிக் டைம் டிராவல் மூவி.. கணம் பட வைரலாகும் ட்ரெய்லர்

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் படம் கணம். இப்படத்தில் ஷர்வானந்த், ரிதுவர்மா, சதீஷ், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். கணம் படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை அமலா.

எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த ஷர்வானந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் கணம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அவரது திரை வாழ்க்கை கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read :அமலாவை அடிக்கடி சந்தித்த சிவகுமாரின் வாரிசு.. அந்த வயசிலேயே இப்படி ஒரு க்ரேஸ்!

இப்படம் அம்மா மகன் பிணைப்பு, இசை, டைம் ட்ராவல் மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் கார்த்தி பாடிய மாறிப்போச்சு பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

சமீபகாலமாக டைம் ட்ராவல் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷாலின் நேற்று இன்று நாளை, சிம்புவின் மாநாடு போன்ற டைம் டிராவல் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதேபோல் கணம் படமும் டைம் டிராவலை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.

Also Read :நம்பி மோசம் போன ஜெய்.. சிம்பு லெவலுக்கு வரவேண்டியது, அடுத்தடுத்து விழும் அடியால் சறுக்கல்

இசைமீது அதீத பிரியமுள்ள அமலாவின் மகன் சிறு வயதில் காணாமல் போகிறார். கடைசியில் தனது மகனுடன் அமலா இணைகிறாரா என்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Also Read :பழையபடி சிம்புவிற்கு டிராப் ஆகும் படங்கள்.. தலைவிரித்தாடும் தலக்கணம்