Tamil Cinema News | சினிமா செய்திகள்
கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகரின் தற்போதைய நிலை.. அடக்கடவுளே!
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் ஒரு உண்மையான சந்தோஷமான நிகழ்வு என்னவென்றால் அது கனா காணும் காலங்கள் சீரியல் பார்க்கும் போதுதான். அவர்களும் அப்போது பள்ளி பருவங்களில் இருந்ததால் ஈசியாக தங்களால் அந்த சீரியல் உடன் ஒத்துப் போக முடிந்தது.
அந்த சீரியலில் நடித்த அனைவரையுமே விஜய் டிவி தரும் கைவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் பெரிய அளவில் யாராலும் சாதிக்க முடியவில்லை.
கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த இர்பான் சுண்டாட்டம் எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற நாடகத்திலும் மேலும் ஒரு படத்திலும் நடித்தார். தற்போது ஆளே அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டார்.
அதே சீரியலில் பச்சை என்கிற பச்சையப்பன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் தான் வாசுதேவ கிருஷ் மதுசூதன். இவர் சுண்டாட்டம் படத்தில் தன்னுடன் நடித்த இர்பான்க்கு வில்லனாகவும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு எடுத்த மதுசூதன் பல தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் வாடி வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

vasudev-cinemapettai
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
