அசத்தலாக வெளியாகப்போகும் விக்ரம் பட டிரைலர்.. ரீ-என்ட்ரினா இந்த மாதிரி சம்பவம் இருக்கணும்

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட பல அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படம் ஜூன் 3ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று கமலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் சமீபத்தில் வெளியான படத்தின் மேக்கிங் காட்சிகளும் அந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் கமல் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் இந்த விக்ரம் படம் ரிலீசாக இருக்கிறது.

அதனால் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதிலிருந்தே கமல் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

அந்த வகையில் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக படத்தின் டிரைலர் சம்பந்தப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் ட்ரைலர் வரும் மே 18 ஆம் தேதி கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு புதுமையை செய்யும் கமல் இந்த ட்ரெய்லர் விஷயத்திலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். அதில் மேலும் ஒரு சர்ப்ரைஸாக இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல் டி ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் மிகவும் இளமையாக வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -