3 முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுத்த ஆண்டவர்.. களைகட்ட போகும் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச்

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கமலின் நடிப்பில் பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படம் வெளிவருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. அதனால் ஆண்டவரின் ஆட்டத்தை காண ரசிகர்கள் இப்போதே தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் வரும் மே 15-ம் தேதி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. முதலில் இந்த நிகழ்வு துபாயில் தான் நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்த ஆடியோ லான்ச்சில் விக்ரம் படத்தின் டிரெய்லரும் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா போன்ற பல பிரபலங்களை அழைத்து உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக தமிழ்நாட்டில் வெளியிட இருக்கிறார். அதனால் அவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். அதோடு கமல் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருப்பதால் சில அரசியல் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சாண்டி மாஸ்டர் நடனம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த விழாவில் நாம் எதிர்பார்க்காத வகையில் இன்னும் சில ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. இதனால் மே 15 அன்று அந்த அரங்கமே பிரபலங்களால் அதிர போகிறது. தற்போது அதற்கான பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

- Advertisement -