Connect with us
Cinemapettai

Cinemapettai

சந்தானத்துக்காக கமலின் ஹிட் பாடலை ரீ மிக்ஸ் செய்யும் யுவன்! குஷ்பு ரோலில் யார் ஆடுவாங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்துக்காக கமலின் ஹிட் பாடலை ரீ மிக்ஸ் செய்யும் யுவன்! குஷ்பு ரோலில் யார் ஆடுவாங்க

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் டிக்கிலோனா ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

ஹீரோவாக சந்தானம், அனகா மற்றும் ஷிரின் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே நடிக்கும் படமே டிக்கிலோனா.

சந்தானம் மூன்று ரோல்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் நடந்த கல்யாணத்தை நிறுத்த டயம் ட்ராவல் செல்கிறார் சந்தானம்.

இப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான சூப்பர் ஹிட் கமல் பாடல் ஒன்று இடம் பெருகிறதாம்.

சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. அப்படத்தில் இடம்பெற்ற ‘வைச்சாலும் வைக்காம’ பாடல் மிகவும் பிரபலம். அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

இப்போது அந்தப் பாடலை மார்டனைஸ் செய்துள்ளாராம் யுவன். காமெடி கலாட்டா 2.0 வுக்கு ரெடியாகுங்க மக்களே.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top