கமலின் படத்தில் வீசும் மலையாள வாசம்.. நாராம இருந்தா சரி

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்ததால் அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை நிதானமாகத்தான் கையாள வேண்டும். அந்த வகையில் கமல் ஏற்கனவே அடுத்த படத்திற்கான இயக்குனரை விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

பிரபல மலையாள இயக்குனர் னுடன் தான் இணைய உள்ளதாக கமல் அறிவித்தார். மகேஷ் நாராயணன் மலையாளத்தில் பகத் பாசிலை வைத்த மாலிக் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் உலகநாயகனின் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களில் எடிட்டராகவும் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் இவர் கமலுடன் இணையும் படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் கமலுடன் மலையாள நடிகர்கள் பகத் பாசில் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தனர். அவர்கள் மீண்டும் கமலுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கயுள்ளனர்.

மேலும் விக்ரம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு அனிருத்தின் இசைக்கும் உண்டு. இதனால் தனது அடுத்த படத்தில் அனிருத்தை இசை அமைப்பாளராக கமல் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்த நிலையில் மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் தேர்வாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அனிருத் எப்படியோ, அதேபோல் மலையாள சினிமாவில் சுசின் ஷியாம். இந்நிலையில் கமலின் அடுத்த படத்தில் இயக்குனர், நடிகர்கள், இசையமைப்பாளர் என அனைத்துமே மலையாள சினிமாவை சார்ந்தவர்கள். இதனால் இப்படம் முழுக்க முழுக்க மலையாள சாயலில் இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் மொழியைத் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக விக்ரம் படத்தை கமல் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது கமல் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த படம் தமிழ் ரசிகர்களை கவருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்