Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-lokesh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலை வைத்து லோகேஷ் நடத்திய பிரம்மாண்டமான போட்டோஷூட்.. அரசியலைத் தாண்டி சினிமாவில் எகிறும் எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும்  படம் தான் கமல் 232.  மேலும்  இந்தப் படத்தில் ரஜினி முதலில் நடிக்க இருந்ததாகவும், ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத காரணத்தால் கமல் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்டமான போட்டோ ஷூட் ஒன்றை இந்த படத்திற்காக கமலை வைத்து நடத்தி உள்ளாராம்.

அதாவது ‘எவன் என்று நினைத்தாய்’ அல்லது ‘குரு’ என பெயர் வைக்கப்பட உள்ள இந்த படத்தின் போட்டோ ஷூட் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.

இதனால் நவம்பர் 7-ம் தேதி இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தலைப்பு ஆகியவை வெளிவர வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் திரையுலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் வழக்கமான போட்டோஷூட் மாதிரி இல்லாமல் ஸ்டன்ட் மாஸ்டர்களை எல்லாம் கூப்பிட்டு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறாராம் லோகேஷ்.

மேலும் இதில் புகழ்பெற்ற போட்டோகிராபரான வெங்கட்ராமை வைத்து கமலுக்காக மிகப்பிரம்மாண்டமான போட்டோ சூட்டை நடத்தியுள்ளார் லோகேஷ்.

kamal-photoshoot-cinemapettai

kamal-photoshoot-cinemapettai

இதனால் கமல் ரசிகர்களிடையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Continue Reading
To Top