ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

கமல் மகள்-னா அப்படி பண்ணலாமா? கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் செய்த குழப்பம்!

ஸ்ருதிஹாசன் தன் அதிரடி செயல்களுக்கும் முடிவுகளுக்கும் பெயர் போனவர். இவர் கூலி படத்தில் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, சோபின் ஷாகிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரிஸ் ஞானதரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட் செய்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ரஜினி- லோகேஷ் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தை ரஜினியின் சூப்பர் ஹிட் படமாக்கும் முயற்சியில் லோகேஷ் இறங்கியுள்ள நிலையில் இதுவரை இல்லாத ரஜினியை இப்படத்தில் பார்க்கலாம் என கூறியிருந்தார். எனவே ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

கூலி படத்தில் இருந்து விலகும் ஸ்ருதிஹாசன்?

இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தான் ஏற்கனவே கமிட் ஆன இரண்டு படங்களில் இருந்து திடீரென விலகிய நிலையில் , கூலி படத்தில் இருந்தும் அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் மகளாக அறியப்பட்டாலும் தன் திறமையின் மூலம் தென்னிய சினிமாவிலும் இந்தியிலும் புகழ்பெற்ற நடிகையாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்கிறார் ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே தெலுங்கில் அடிவி சேஷ் ஹீரோவாக நடித்து வரும் டெக்காய்ட் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆன நிலையில், இப்படத்தின் டீசரும் வெளியானது. இப்படம் காதல் கதையாக உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தில் ஹீரோயின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறி ஸ்ருதிஹாசன் விப்படத்தில் இருந்து விலகினார். படக்குழுவினரும் இதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, சென்னை ஸ்டோரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த ஸ்ருதிஹாசன் அப்படத்தில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டிலும், வாழ்க்கையிலும், காதலிலும் பல அதிரடி முடிவுகளை எடுத்த ஸ்ருதிஹாசன் இந்த இரு படங்களில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தன் நண்பரும் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து விலகுவாரா? என கேள்வி எழுந்த நிலையில் அவர் விலக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகும் தகவல் ரஜினி மற்றும் லோகேஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கமல்ஹாசன் மகள் என்பதற்காக இப்படியா?

கமல்ஹாசன் மாதிரியே பல்வேறு திறமைகளைக் கொண்டு சினிமாத்துறையில் கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், சமீபகாலமாக தான் ஒப்புக் கொள்ளும் படங்களில் திடீரென்று விலகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கூலி படம் ரஜினி படம் என்பதால் அவர் இந்த மாதிரி முடிவெடிப்பார என்பது கேள்வியை எழுப்பியுள்ளது, அதேசமயம் அவருக்கு சுயமரியாதை அதிகம் என்பதால் யாரேனும் படத்தில் அதிகம் தலையிட்டாலும் ஸ்ருதிஹாசன் விலக நேரிடலாம் என தகவல் வெளியாகிறது.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு கமல்ஹாசன் மகள் என்பதற்காக மட்டும் அவர் பாதியில் விலகுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? மற்ற நடிகர்கள் அப்படி செய்தால் ஒப்புக் கொள்வார்களா? என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News