புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கமலின் பிறந்தநாளுக்கு செம ட்ரீட்.. தக்லைஃப் அப்டேட் சொன்ன படக்குழு

கமலின் ஒவ்வொரு படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம்தான். ஆனால் இம்முறை அவர் கூட்டணி வைத்திருப்பது மணிரத்னத்துடன். இருவரின் கூட்டணியில் 33 ஆண்டுகளுக்குப் பின் உருவாகி வரும் படம் தக்லைஃப். இப்படத்தில் கமலுடன் இணைந்து, ஜெயம் ரவி, சிம்பு, திரிஷா,கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைகிறார். இப்படத்தை கமல், மணிரத்னம், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடித்து வருவதாகவும், பக்கா ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது முழு வீச்சில் இதன் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இப்படத்தில் காட்சிகளைப் பார்த்த கமல், இப்படம் வெகு சூப்பராக வந்திருப்பதாக படக்குழுவை பாராட்டியிருந்தார்.

விக்ரம் படத்திற்குப் பிறகு முழு நீள ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமான தக்லைஃபில் கமல் நடித்துள்ளதால், இது ரசிகர்கள் கொண்டாத்த்திற்குரிய படமாக இருக்கும் என தெரிகிறது.

அதேபோல் இப்படத்தில் கமல், ரஹ்மான் மணிரத்னம் என மூன்று லெஜண்டுகளும் பணியாற்றி வருவதால் இப்படத்தின் மார்க்கெட், படத்தின் டிஜிட்டல் உரிமை, ஆடியோ ரைட்ஸ் இதெல்லாம் பல கோடிகளுக்கு விற்கப்படும் எனவும் இப்படத்தின் வசூலும் தமிழில் புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் த்ரிஷா ஒரு சூஃபி கதக் நடனம் ஆடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தன் இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில் வைரலானது. நிச்சயம் திரிஷாவுக்கும் இப்படம் கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

கமல் பிறந்த நாளில் சிறப்பு வீடியோ

இந்த நிலையில், தக்லைஃப் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல் பிறந்த நாளில் தக்லைஃப் படத்தின் புதிய மற்றும் சிறப்பு வீடியோ காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்து, புதிய போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இதில், இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் உள்ள வீடியோவை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thuglife-kamal
thuglife-kamal
- Advertisement -

Trending News