கமலுக்கு நகைச்சுவை சொல்லி கொடுத்த நடிகர்.. அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்களையும் பயப்பட செய்தவர்

உலக நாயகன் கமலஹாசன் படங்களில் எப்போதுமே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. கமல் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை மூலமே எதிரிகளை விமர்சிப்பார். அவர் சொல்லும் சில கருத்துக்கள் உடனே புரியாது. பின்பு யோசித்துப் பார்த்தால்தான் அதன் முழு அர்த்தமும் புரியும்.

அவ்வாறு திரை வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவையுடன் ஒன்றிப்போய் உள்ளவர் கமல். இதற்கு முக்கிய காரணம் அவர் உடன் நடித்த சக நடிகர் தான். அவரை கிரேசி மோகன், கமல் போன்ற பல பிரபலங்களுக்கு காட்பாதர் என்றே சொல்லலாம்.

அவர் வேறு யாரும் இல்லை துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல பரிமாணங்களைக் கொண்ட சோ தான். இவர் மிகச் சிறந்த அறிவாளி. சோ எழுத்து, பேச்சு, நகைச்சுவை என அனைத்திலும் தன்னிகரற்றவர். அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சோ தனது டைமிங் வசனங்களால் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எம்ஜிஆர், சிவாஜி முதல் ரஜினி, கமல் வரை அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சோ நகைச்சுவை நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள அரசியல்வாதிகளை நேரடியாக விமர்சிக்கக் கூடிய துணிச்சலான நபர் சோ. இவருடைய துக்ளக் நாளிதழ் மூலம் அரசியலையும் கேலி கிண்டல் செய்தார். சோ இடமிருந்து சாதுரியமாக பேசும் திறமையும், நகைச்சுவையும் கற்றுக் கொண்டார் கமலஹாசன்.

கிரேசி மோகன் கதை எழுதி கமல் நடித்த படங்கள் முழுவதும் நகைச்சுவையால் நிறைந்திருக்கும். இதற்கு முக்கிய கருவாக இருந்தவர் சோ தான். கமல், என்னுடைய ஹியூமருக்கு முக்கிய காரணம் சோ தான் என்னுடைய ஆசானே சோ தான் என வெளிப்படையாக பல இடங்களில் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்