Photos | புகைப்படங்கள்
கமலின் முதல், 2ம் மனைவியின் தற்போதைய நிலை.. ஆச்சரியமூட்டும் வைரல் புகைப்படங்கள்
கமலஹாசனின் 2 மனைவிகள் தற்போது உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். பன்முகத்தன்மை கொண்ட கமலின் திரை வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் கமலின் திரை வாழ்க்கையிலும் பல சர்ச்சைகள் இருந்தது.
கமல்ஹாசன் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடத்திலேயே இவர்கள் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தான் 1988 ஆம் ஆண்டு நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Also Read : அதிக எதிர்பார்ப்புடன் வர இருக்கும் 6 படங்கள்.. விஜய், அஜித்தை ஓரம்கட்ட வரும் கமல்
இவர்கள் இருவருமே இப்போது நடிகைகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் சரிகாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு தான் நடிகை கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கமல்ஹாசன் வாழ்ந்து வந்தார்.
பின்பு அவருடனும் மனஸ்தாபம் ஏற்பட பிரிந்து விட்டனர். இந்நிலையில் அண்மையில் சரிகா ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதாவது கொரோனா பரவல் காரணமாக எல்லோருமே அப்போது பணம் நெருக்கடியில் இருந்தனர். அந்த சமயத்தில் 2000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்ததாக கூறியிருந்தார்.
Also Read : இப்படியும் ஒரு மனுஷனா, மொத்த கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த கமல்.. இந்த வயசுல இவ்வளவு படங்களா?
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. உலக நாயகன் கமல்ஹாசனின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் கமலின் முதல் மற்றும் இரண்டாம் மனைவி தற்போது உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கமலின் முதல் மனைவி வாணி கணபதி

kamal-vani
கமலின் இரண்டாவது மனைவி நடிகை சரிகா

kamal-sarika
Also Read : கதை கேட்டு ஆச்சரியப்பட்டு உறைந்து போன கமல்.. இயக்குனருக்கு உடனே ஆரம்பிக்க போட்ட கட்டளை
