Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையின் உதட்டை கடித்த உலகநாயகன்.. 33 வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை
இந்திய சினிமாவை பொறுத்தவரை காதல் மன்னன் என்றால் அது நடிகர் கமலஹாசன் மட்டும்தான். படத்திற்கு படம் காதலை வித்தியாசமாக செய்பவர் இவர் மட்டுமே. அந்த காலத்திலேயே இங்கிலீஷ் பட ரேஞ்சுக்கு காதல் செய்வதவர். அதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளும் இவருக்கு வந்துள்ளது.
இந்நிலையில் புன்னகை மன்னன் படம் வெளியாகி 33 வருடங்கள் கழித்து தற்போது அந்த படத்தில் நடந்த கசப்பான நிகழ்வு ஒன்றை பிரபல நடிகை ரேகா பகிர்ந்துள்ளார். கமல், ரேகா, ரேவதி போன்றவை நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் புன்னகை மன்னன்.
இந்த படத்தில் கமலஹாசனும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்ள மலை உச்சியில் இருந்து கீழே விழும் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகை ரேகாவின் உதட்டை கமலஹாசன் பதம் பார்த்து இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த காட்சி எடுக்கும் முன்பு இயக்குனரும் கமலஹாசனும் நடிகையிடம் முத்தம் கொடுப்பதை பற்றி தெரிவிக்கவில்லையாம்.
அந்தக் காட்சி எடுக்கும் போது திடீரென கமலஹாசன் ரேகாவின் உதட்டை தனது உதட்டால் கவ்வியதாகவும் இதனால் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சி அடைந்த ரேகா இந்த கசப்பான நிகழ்வுக்கு பிறகு அவர்களிடம் சில நாட்கள் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அப்போதே இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

kamal-rekha
தற்போது பிரபல டிவி ஒன்றில் நடைபெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் திரையில் தோன்றியுள்ள ரேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளது கமல் ரசிகர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
