fbpx
Connect with us

Cinemapettai

கமல் – லோகேஷ் கனகராஜ் படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? சந்தேகத்தை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் – லோகேஷ் கனகராஜ் படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? சந்தேகத்தை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய்யுடன் மாஸ்டர் படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் எந்த நடிகரை வைத்து அடுத்த படத்தை எடுக்கப் போகிறார் என அனைவரும் ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைவதை உறுதி செய்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது இணையத்தில் செம வைரல்.

எப்போதுமே ஒரு புதிய பட போஸ்டர் வெளியானவுடன் அது எங்கிருந்து சுடப்பட்டது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக என நான்கு பேர் கொண்ட ஒரு குழு வேலை செய்து வருகிறது.

அப்படி அவர்கள் தேடியதில் கிடைத்தது தான் லோகேஷ் மற்றும் கமல் ஹாசன் இணையும் படத்தின் போஸ்டர் காப்பி. ஹாலிவுட்டில் மெக்கானிக் என்ற படத்தின் போஸ்டரிலிருந்து இன்ஸ்பயர் ஆகி இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

kamalhassan-232-cinemapettai

kamalhassan-232-cinemapettai

ஹாலிவுட் படமான மெக்கானிக் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பான சண்டைக் காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல்தான் கமல்ஹாசன் 232 படம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

machanic-movie-poster

machanic-movie-poster

இந்நிலையில் இந்த போஸ்டர் காப்பி தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்கானிக் படத்தில் துப்பாக்கியில் போஸ்டர் வந்ததைப்போல கமல்ஹாசன் படத்தின் போஸ்டரும் துப்பாக்கியால் கமலஹாசன் புகைப்படம் இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.

போஸ்டர் தான் காப்பியா அல்லது படமே காப்பியா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும் என்கிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
To Top