தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தார் நடிகர் கமல்ஹாசன்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு என்பது போல் தான் அவருடைய கருத்துக்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது, ஒரு கட்டத்தில் சசிகலா ஆட்சிக்கு வருவது தனக்கு பிடிக்கவில்லை என ஓப்பனாக கூறினார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ‘ அனைத்து எம்.எல்.ஏக்களும் உங்களுடைய தொகுதிக்கு செல்லுங்கள், அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள் என்று ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்து மக்களை வன்முறைக்கு தூண்டுவது போல் உள்ளது… என கூறி இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹிம் , இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்..

இதில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் கமலஹாசன் பொது மக்களை வன்முறைக்கு தூண்டுவது போல சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாககமிஷ்னர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கமல் மீது வழக்கு பாயுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.