fbpx
Connect with us

கமலஹாசனுக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு.. நீண்ட நாள் கழித்து வெளிவந்த ரகசியம்

kamal-manivannan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலஹாசனுக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு.. நீண்ட நாள் கழித்து வெளிவந்த ரகசியம்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர் என்றால் அது கமலஹாசன் தான். தன்னுடைய நடிப்பு திறமையால் பல பேரை ஆச்சரியமடையச் செய்தவர். அதுமட்டுமல்லாமல் இன்று ஹாலிவுட்டில் பயன்படுத்தும் அனைத்து விஷயங்களையும் தமிழ் சினிமாவில் எப்போதே பயன்படுத்தியவர்.

ஆனால் அதற்கான அங்கீகாரம் எப்பொழுதுமே அவருக்கு லேட்டாகத்தான் கிடைக்கும். இருந்தாலும் சினிமாவுக்கு வர வேண்டும் என எண்ணுகின்ற பல்லாயிரக்கணக்கான பெயருக்கு கமலஹாசன் தான் ரோல் மாடல்.

அதேபோல் நக்கலும் நையாண்டியும் கலந்து அரசியல் கதைகளில் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க முடியுமென சாதித்துக் காட்டியவர் தான் மணிவண்ணன். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இன்றும் இவரது அமைதிப்படை படத்தை மிஞ்ச இன்னொரு படம் வரவில்லை. அப்பேர்பட்ட கமல்ஹாசனுக்கும் மணிவண்ணனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது சினிமா வட்டாரங்களில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் போர் நடந்து கொண்டிருக்கும் போது கமலஹாசன் அமெரிக்காவிற்கு சப்போர்ட் செய்து பேசினார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அன்னிய கலாச்சாரங்களை அதிகமாக திணிக்க முற்பட்டதாக கமல்ஹாசன் மீது கோபம் வந்துள்ளது.

தமிழ் கலாச்சாரங்களை பெரிதும் மதிக்கக்கூடிய மணிவண்ணன், கமலஹாசன் தொடர்ந்து தன்னுடைய படங்களில் அன்னிய கலாச்சாரங்களை பொருத்தி வந்தது தாங்க முடியாமல் ஒரு மேடையில் தாக்கி பேசினார். மேலும் கமலஹாசன் அப்போதே அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும் அதே மேடையில் கமலை கிழித்தார்.

அதன்பிறகுதான் இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் தொடங்கிவிட்டதாக அன்றைய பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தது. இருந்தாலும் அவ்வை சண்முகி படத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டியை யாராலும் மறக்க முடியாது.

கீழே உள்ள வீடியோவை பார்த்தால் மணிவண்ணனின் கோவம் தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top